News
ஹனீப் யூசுப்பை ஆளுநராக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது
ஹனீப் யூசுப்பை ஆளுநராக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர் கேள்வி எழுப்பினார்.
அவர் ஒரு சிறந்த வர்த்தகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.அவர் ஏற்றுமதி துறையில் மில்லியன் கணக்கான பணத்தை நாட்டிற்கு ஈட்டித்தந்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.அவர் அனுரவின் வெற்றிக்காக நிதி வழங்கியிருக்கலாம். அதனால் அவருக்கு கைமாறாக இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதா என நான் கேட்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுர குமாரவை பற்றி பேசுவதற்கு எனக்கு பயம் இல்லை. நாம் ஊழல் மோசடி செய்யவில்லை என அவர் குறிப்பிட்டார்.