News
இஸ்ரேலின் உள்ளே புகுந்து துப்பாக்கிச் சூடு… 7 பேர் பலி, 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

இஸ்ரேலின் தெற்கு டெல் அவிவ் நகரில் உள்ள யாபா பகுதியில் இரு மர்ம நபர்கள் திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரு மர்ம நபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில். இஸ்ரேலில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

