News
எமது சமகி ஜன சந்தானய (SJS) கட்சி பொதுத் தேர்தலில் பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றால் நாம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்

எதிர்காலத்தில் சமகி ஜன சந்தானய (SJS) அரசாங்கம் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறும் பட்சத்தில் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுடன் ஒத்துழைக்கும் என்று அதன் தலைவர்கள் இன்று தெரிவித்தனர்.
SJS தலைவர்களான ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசிம், மனோ கணேசன், தயாசிறி ஜயசேகர மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர், தமது தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்னெடுக்கப்படும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம் என அனைத்து தலைவர்களும் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
“ஜனாதிபதி பதவியை வகிக்கும் அதே கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற மக்கள் அனுமதிக்கக்கூடாது” என்றும் sjs தலைவர்கள் மேலும் தெரிவித்தனர்.

