News

நண்பனின் காதலியை சந்திக்க சென்று தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்பாட்டம் .

நண்பனின் காதலியை சந்திக்க சென்ற பாடசாலை மாணவனை , குழுவொன்று கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் நாலந்தவத்தை பிரதேசவாசிகளும் உயிரிழந்த மாணவன் கல்வி கற்ற பாடசாலையின் மாணவர்களும் வியாழக்கிழமை (03) அன்று பாடசாலைக்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

உயிரிழந்த பாடசாலை மாணவனின் வீட்டிலிருந்து கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியூடாக 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கலைமகள் பாடசாலைக்கு பேரணியாக வந்த மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சுமார் ஒரு மணி நேரம்வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் மாணவனின் மரணத்திற்கு நீதி வழங்குமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

மேலும் ஆர்ப்பாட்டத்தில் பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button