News

திருடர்களை ஜனாதிபதியிடம் பிடித்துக்கொடுக்க என்னிடம் ஆதாரம் உள்ளது ; டயானா கமகே

(தற்போது பேசு பொருளாக உள்ள) எனக்கு அரசாங்கத்தால் தந்திருந்த வாகனத்தை பற்றி நான் ஒரு சிறு விடயத்தை கூற வேண்டும் என இன்று நிருபர்களை சந்தித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

நான் சுற்றுலா இராஜாங்க அமைச்சராக இருந்ததால் நாடு முழுதும் செல்ல வேண்டி இருந்ததாலும் எனக்கு வாகனம் ஒன்றை தந்தார்கள்

அதேவேளை நான் அன்றும் தெரிவித்த ஒரு விடயம் என்னவென்றால், நான் இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் எனக்கு எந்த வேலையையும் இவர்கள் செய்ய விட இல்லை.


அந்த அமைச்சில் இருந்த அதிகாரிகள் செயலாளர் எல்லாரும் ஒரு திருட்டு கூட்டம்.
இப்போது பதவி ஏற்றுள்ள ஜனாதிபதி திருடர்களை பிடிக்கப் போவதாக சொல்கிறார் உண்மையில் அந்தத் திருடர்களை கட்டாயம் பிடிக்க வேண்டும்..  என்னிடமும் அவர்கள் செய்த திருட்டு சம்பந்தமான பல விபரங்கள், ஆதாரங்கள் உள்ளன.


அமைச்சில் எனக்குத் தந்திருந்த வாகனம் தினமும் உடைந்தது. மேலும் எப்போ பார்த்தாலும் உடைந்தே இருந்தது
.

ஒரு தடவை எனக்கு தந்திருந்த வாகனத்தின் ABS உடைந்து ஆயில் லீக் ஆகி வீதி முழுதும் கசிந்தது.. இன்னும் கொஞ்சத்தில் எமது வாகனம் ஒரு நபரை மோதி இருக்கும் நூலிழையில் தப்பினார் அந்த நபர்.

அந்த வாகனத்தை நான் திருப்பி  கொடுத்த போது அதிகாரிகள் அதனை மாதக்கணக்கில் வாகனம் திருத்தும் கெரேஜ்களில் வைத்திருந்து பத்தாயிரம் ரூபாய் கெரேஜ் பில்லை 10 லட்சம் என பில் எழுதி பணம் திருடினார்கள்.

நான் காரியாலயத்தில் இருந்து வேலை செய்பவள் அல்ல நான் நாடு பூராவும் சென்று சுற்றுலா தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பவள் அதற்கு எனக்கு தேவைப்பட்ட வாகனத்தை ஒருநாளும் எனக்கு தரவில்லை.

நான் கேட்ட வாகனத்தை இறுதியில் ஜனாதிபதி காரியத்தில் இருந்து தந்தார்கள் நான் அந்த வாகனத்தை எனது கடமைகளுக்காக தான் பாவித்தேன் வேறு யாருக்கும் வழங்கக் கூட இல்லை ஒரு சிலரைப் போல் தமது குடும்பத்தினருக்கு நான் வாகனங்களை வழங்கவில்லை.

அதேபோல் இறுதியில் என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது நான் வாகனத்தை கொண்டு சென்று கையளித்தேன் அவ்வளவு தான் நான் செய்தது.

நான் இராஜாக்கள் அமைச்சராக இருந்தபோது தந்த வாகனத்தை பதவி முடிந்தவுடன் கையளித்து விட்டேன் அவ்வளவுதான் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button