News

கண்டக்டர் மிகுதி பணம் தரவில்லையா? டிக்கட் தரவில்லையா? அழையுங்கள் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு..

பேருந்தில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும் மிகுதிப் பணத்தையும் வழங்காத நடத்துனர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு, குறித்த முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர், பேருந்து பயண கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மிகுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேருந்து நடத்துனர்களுக்கும், பயணிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button