News

ரிஷாத் பதியுதீன் எனது வீட்டுக்குள்ளேயே பிரச்சினையை உருவாக்கி சீரழித்தார் – மேலும் அவர் என்னை சஜித் பிரேமதாசாவுக்காக அரசியல் செய்ய சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை ; அப்துல்லாஹ் மஹ்ரூப்

ஐக்கிய தேசியக் கட்சியின்  திருகோணமலை மாவட்ட அமைப்பாளராகவும்  மூதூர் தொகுதியின் வேட்பாளராகவும் செயற் பட கட்சி அங்கீகாரம் வழங்கி உள்ளதாக முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில்  (05) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது,
எனது அரசியல் வாழ்வு 1988 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் அஷ்ரபுடன் ஆரம்பமானது.

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் 35,558 வாக்குகளைப் பெற்று  நாம் ஐந்து ஆசனங்களையும், 42000 வாக்குகளைப் பெற்று ஈபிஆர்எல்எப் ஐந்து ஆசனங்களையும்பெற்றது.

பத்து வருடங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அதன் தேசிய அமைப்பாளராக மாவட்ட பொறுப்பாளராக மிகவும் நான் நேசித்த ஒரு தலைவராக ரிஷாட் பதுருதீனை எம். எச் . எம் .அஷ்ரப் அவர்களுக்கு பிறகு ஒரு தூய்மையான தலைவராகவே நினைத்து அவரோடு பயணித்தேன்.

மாறாக அவரது செயற்பாடுகள் ஐந்து வருட காலமாக எனக்கு மாறானதாக எனது வீட்டுக்குள்ளே ஒரு பிரச்சனை உருவாக்கி எனது குடும்பத்துக்குள் பிளவுகளை உண்டாக்கி எனது பெயரை சீரழித்து என்னை கட்சியிலிருந்து ஒதுக்குவதற்கு நினைத்தபோது அவரது உள்ளத்தை உருவத்தை கண்டபோது நான் அவரது கட்சியை விட்டும் எனது பதவியை விட்டும் அமைப்பாளர் பதவியை விட்டும் வெளியேறினேன்.

சஜித் பிரேமதாசாவுடன் சேர்ந்து அவருக்காக செயற்படும் படிகூறிய போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இளைஞர்களின் சமூக ஆதரவை பெற்று ரணில் விக்ரம சிங்கவின் உடைய ஐக்கிய தேசியக் கட்சியிலே நான் போட்டியிடுகின்றேன் 

*நான் இருந்தால்   ரிஷாட் பதுருதீனுக்கு பிரச்சினையாகிவிடும் என கருதியோ என்னை கட்சியை விட்டு வெளியேற்றுவதே மறைமுகமாக ஐந்து வருடங்கள் செயல்பட்டதை நான் ஒரே ஒரு நாளில் ஒரே ஒரு நிமிடத்தில் ஒரே தினத்தில் கண்டு கொண்டேன்*

என்னுடைய மூத்த  மகளின்  கணவரை வேட்பாளராக தன்னிச்சையாக அவர் அறிவித்தார் என தெரிவித்தார்
Hasfar A Haleem BSW (Hons)
Journalist

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button