News
அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகும் வரை எந்தவித வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் வரை எந்தவொரு வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கும் தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் ஆதரவளிக்காது என அக்கட்சி முக்கியஸ்தர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
“அடுத்த தேர்தலில் அனுர திசாநாயக்க ஜனாதிபதியாகும் வரை எந்தவொரு வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கவோ அல்லது வழிநடத்தவோ போவதில்லை என தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தீர்மானித்தது” என தம்புள்ளையில் நடைபெற்ற NPP பேரணியில் சமரசிங்க அறிவித்தார்.
அரச துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாத அரசாங்கத்தை விமர்சித்த சமரசிங்க, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

