News
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நஷ்டயீட்டில் 58 மில்லியன் ரூபாயை செலுத்திவிட்டதாக தெரிவித்த மைத்திரிபால சிறிசேனவுக்கு மீதி 42 மில்லியனையும் விரைவில் செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிமன்றம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் நஷ்டயீட்டில் 58 மில்லியன் ரூபாயை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு 06 வருட கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிலுவையில் உள்ள மீதி இழப்பீட்டுத் தொகையை (42 மில்லியன்) செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

