News

ராஜபக்சேக்களுக்கு எதிரான அனைத்து ஊழல், மோசடி வழக்குகள் தொடர்பிலான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன ; வசந்த சமரசிங்க

கடந்த முறை சர்ச்சையை ஏற்படுத்திய ராஜபக்சேக்களுக்கு எதிரான அனைத்து ஊழல், மோசடி வழக்குகள் தொடர்பிலான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இரண்டு வாரங்களாக அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனால் ஊழல் செய்தவர்கள் கவலையில் உள்ளனர். 

மத்திய வங்கி bond ஊழல், ஈஸ்டர் தாக்குதல், லசந்த விக்கிரமதுங்க கொலை, தாஜுதீன் கொலை, எக்னலிகொட காணாமல் போனது பற்றி  11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போனது, பசளை என்று கூறி கப்பலில் குப்பை, மலம் கொண்டு வந்தது இந்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

உகண்டாவை காட்டிவிட்டதால்  டெய்சி பாட்டியின் ரத்தின பையை விசாரிப்பார்கள்  நாமல் ராஜபக்ச நினைத்துக் கொண்டுள்ளார்.

மேலும் நாம் உகாண்டாவை பார்த்துக் கொண்டு அவர்களின் துபாய் கணக்குகளில் பணம் எப்படி மாற்றப்பட்டது என்பதை கண்டு பிடிக்க மாட்டோம் என நாமல் ராஜபக்ச நினைக்கிறார். 

ராஜபக்சேவின் திருமணங்களுக்கு உகாண்டாவில் இருந்து விமானம் எடுத்துச் செல்லும்போது, எப்படி வந்தார்கள், போனார்கள் என்று தேடப்படுகிறது .  உகாண்டா மட்டுமின்றி அபுதாபியிலும் ராஜபக்சேவின் ஊழல்களை எல்லாம் தேடப்படுகிறது   எனவே, திருடர்கள் செய்த திருட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என மேலும் தெரிவித்தார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button