குட்டி இங்கிலாந்தில் மோசமான தொழில்… பொலிஸாரின் சுற்றிவளைப்பில் ஐந்து பெண்களும் மெனேஜரும் கைது
மிகவும் குளிரான பிரதேசமான சின்ன இங்கிலாந்து என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா சினிசிட்டா மைதானத்திற்கு முன்பாக மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்து ஐந்து பெண்கள் உட்பட விடுதியின் முகாமையாளர் செவ்வாய்க்கிழமை (08) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமொன்றில், மசாஜ் சென்டர் நடத்துவதாக கூறி பெண்களை பணத்திற்கு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையின் போது குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனை வியாபாரமாக நடத்தி சென்ற நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் கொலன்னாவ, ஹசலக்க, கடவத்தை, வெலிமடை, ஹோமாகம ஆகிய பகுதிகளை சேர்ந்த 32-47 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், அவர்களை புதன்கிழமை (09) அன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.