News
55 மில்லியன் ரூபா வரியை மோசடி செய்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனம் அரசுடமையாக்கப்பட்டது
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொய்யான தகவல்களைப் பயன்படுத்தி 55 மில்லியன் ரூபாவை மோசடி செய்து இந்த வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மிட்சுபிஷி மொன்டெரோ ஜீப் வாகனம் பதுளை பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது