News
எரிபொருள் விலையில் 82 ரூபா குறைக்க முடியும்… ஏன் குறைக்காமல் இருக்கிறார்கள்?
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னுக்கு பின் முரணான கதைகளை கூறி வருவதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
அநுர திஸாநாயக்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் தெரிவித்தது போன்று எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு கடன் இல்லாத நிலையில் ஒரு லீற்றர் எரிபொருளுக்கு ஐம்பது ரூபா மேலதிக வரி அறவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது மாதாந்தம் 11 ஆயிரம் கோடி இலாபம் ஈட்டி வருவதாகத் தெரிவித்த அவர், மேற்கூறிய ஐம்பது ரூபாவுடன் சேர்த்தால் எரிபொருள் விலையை 82 ரூபா குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
தனியார் FM வானொலியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.