News

பிறப்பிலிருந்தே காது கேட்காமல் கல்வி தடைப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ள சிறுவன் முகம்மட் இமாம் இன் செவித்திறனை பெற சத்திர சிகிச்சைக்கு எம்மால் முடியுமான நிதி உதவி செய்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளஹி வபரகாதுஹூ

மகனின் சத்திர சிகிச்சைக்காக பண உதவி கோரல்

எம்.எஸ்.நலீம் ஆகிய எனது மகன் முகம்மட் இமாம் என்பவரின் காதுகள் இரண்டும் பிறப்பிலிருந்தே கேட்பதில்லை. ஊமை அல்லாத அவரின் காதுகள் மாத்திரம் கேட்க முடியாத காரணத்தினால் அவருக்குப் பேசவும் முடிவதில்லை. இக்காரணத்தினால் எந்தப் பாடசாலைக்கும் இவரை அனுமதிக்க மறுக்கின்றார்கள். இதனால் இவரின் கல்வியும் பாதிக்கப்பட்டு எதிர்காலமும் பாதிப்படைய இது ஒரு காரணமாகவுள்ளது. பிறப்பிலிருந்து காதுகள் கேட்காத காரணத்தினால் 1 ½ வயதிலிருந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றோம். தற்போது அவருக்கு 8 வயதாகின்றது. வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய கூடிய விரைவில் சத்திர சிகிச்சை செய்வதற்கிருகின்றது. அதற்காக ரூ. 49,000,00/=  (49 இலட்சம்) தேவைப் படுகின்றது. (வைத்திய சான்றிதழ்களை இத்தாளுடன் இணைத்துள்ளேன்.) முச்சக்கர வண்டி ஓட்டுனராக தொழில் புரியும் எனக்கு இப் பாரிய தொகையை ஈடு செய்வது மிகக் கஷ்டமான விடயமாகும். தற்போது 8 வயதாகும் அவருக்கு சிகிச்சையின் பின் ஆரம்பக் கல்வியைத் தொடர வேண்டிய நிர்ப்பந்த நிலைமையும்,மகனின் சத்திர சிகிச்சைக்காக பண உதவி கோரல்பரிதாப நிலைமையும் ஏற்பட்டுள்ளது எனவே எனது பிள்ளையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது உங்கள்ளுக்கு முடியுமான பண உதவியைச் செய்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு இத்தால் மூலம் மிகத் தாழ்மையுடனும், பணிவுடனும் கேட்டுக்கொள்கின்றேன்

இப்படிக்கு,

உண்மையுள்ள,

எம்.எஸ்.நலீம்,

BANK OF CEYLON

Madawala Branch,

branch code- 581

M.S. NALEEM

ACCOUNT NO. 7673 5484 

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button