News
VIDEO > சமகி ஜன பலவேகயே கட்சியின் மகளிர் அணி தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிகா அறிவிப்பு
சமகி ஜன பலவேகயே கட்சியின் ‘சமகி வனிதா பலவேகயே’ எனப்படும் மகளிர் அணி தலைவி பொறுப்பில் இருந்து விலகுவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தீர்மானித்துள்ளார்.
ஆனால், பதவியை விட்டு விலகினாலும், கட்சியை விட்டு விலகப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சமகி ஜன பலவேகவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (13) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். VIDEO :