அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படும் பலமான ஒரு அணியை நாம் கண்டி மாவட்டத்தில் களமிறக்கியுள்ளோம்.
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படும் பலமான ஒரு அணியை களமிறக்கியுள்ளதாக இம்முறை கண்டி மாவட்டத்தில் சுயாதீனமாக களமிறங்கியுள்ள சுயேற்சை குழு -11 வேட்பாளர் நிஷாந்த அத்தநாயக குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் உடுதும்பர தேரதல் தொகுதி அமைப்பாளரும் அகில இலங்கை அரிசி ஆலைகளின் தலைவருமான நிஷாந்த அத்தநாயக மேலும் கருத்து வெளியிடுகையில்,
இம்முறை கண்டி மாவட்டத்தில் முதல் தடவையாக பலமான சுயேற்சை குழு ஒன்று களமிறங்கியுள்ளது.எமது அணியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார், அக்குரனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன், கங்கவட கோரள பிரதேச சபை முன்னாள் தலைவர் சிசிர ரனசிங்க போன்றவர்களோடு பிரபல சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், துறைசர்ந்தவர்கள் என பலறும் எம்மோடு கைகோர்த்துள்ளனர்.
கட்சி, இன பேதம் இன்றி மக்களுக்கு பணியாற்றும் நோக்கில் கூட்டு சேர்ந்துள்ள எமது அணி எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் அரசினால் கொண்டுவரப்படும் நல்ல விடயங்களை ஆதரிப்பதோடு பாதகமாக விடயங்களை எதிர்த்து செயற்பட உறுதிபூண்டுள்ளோம்.
பாராளுமன்றத்திற்கு படித்த ஊழலற்ற திறமையானவர்களை தெரிவு செய்ய எமது அணியை கண்டி மாவட்ட மக்கள் ஆதரிக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.