News
பதுங்கு குழியில் இருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பணம், தங்கத்தை கைப்பற்றியதாக இஸ்ரேல் அறிவிப்பு

பெய்ரூட் பதுங்கு குழியில் இருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பணம், தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், பெய்ரூட்டில் மிகபெரிய அளவிலான பதுங்கு குழியை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்துள்ளது.
பெய்ரூட்டில் முக்கிய வைத்தியசாலையான அல்சஹல் என்ற வைத்தியசாலைக்கு நேர் கீழாக பதுங்கு குழி இருக்கிறது.
இந்த பதுங்கு குழி ஹசன் நஸ்ரல்லாவின் இரகசிய பதுங்கு குழியாகும். இதில் ஏராளமான தங்கம், பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதன் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது

