News
நல்லாட்சி அரசில், விவசாய அமைச்சுக்கு பெற்றுக்கொண்ட கட்டிடத்திற்கு வழங்கிய 66 கோடி ரூபாய் வைப்புத் தொகை (கீ – மணி) திரும்ப கிடைக்கவில்லை

நல்லாட்சி அரசாங்கத்தின் போது விவசாய அமைச்சு இயங்குவதற்காக அதிக கூலி கொடுத்து ராஜகிரியில் கட்டடம் ஒன்று பெறப்பட்டது தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உரிய கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெறுவதற்காக அதன் உரிமையாளருக்கு அரசு 66 கோடி ரூபாய் வைப்புத் தொகையாக (கீ மணி) வழங்கியுள்ளது… இந்நிலையில் கட்டிடம் ஒப்படைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் வைப்புத்தொகை பணம் திரும்ப வரவில்லை என விவசாய அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகளை கோரியுள்ளதாகவும் அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

