News
வீட்டின் திறந்திருந்த ஜன்னலுக்கு அருகில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞனுக்கு தீ வைத்துவிட்டு ஓடிய கும்பல் #இலங்கை

கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கொல்லப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நிலந்த குமார என்பவரே இவ்வாறு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் இரவு வேளையில் தனது வீட்டின் திறந்திருந்த ஜன்னலுக்கு அருகில் படுக்கையுடன் உறங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சிலர் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

