News

ஷேக் ஹஸீனாவை பங்களாதேசுக்கு அனுப்ப கோரி கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம்

இலங்கை- வங்களாதேஷ் நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் அந்நாட்டு மாணவ இயக்கங்கள், எதிர்கட்சியினர், இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் மக்கள் திரண்டு கிளர்ச்சியொன்று ஏற்படுத்தப்பட்டு ஷேக் ஹஸீனாவின் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

அதன்போது நிறைய கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஷேக் ஹஸீனாவின் தலைமையிலான அரசாங்கத்தினால் கொல்லப்பட்டனர். இதனால் உக்கிரமைடைந்த கிளர்ச்சியினால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸீனாவின் தலைமையிலான 45 பேர் இந்தியாவுக்கு தப்பி சென்றனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸீனாவின் தலைமையிலான அரசாங்கத்தாருக்கு எதிராக அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் அவர்களை கைதுசெய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருந்தபோதிலும் தப்பிச்சென்ற அவர்களை இந்தியா அடைக்கலம் கொடுத்து வைத்துக்கொண்டிருக்கிறது. அதனை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும். ஷேக் ஹசீனாவையும், இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளோர்களையும் உடனடியாக பங்களாதேசுக்கு திருப்பினுப்ப கோரியே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் போராட்டகாரர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

இது விடயம் தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டகாரர்கள் மகஜரொன்றையும் கையளித்தனர்.

Recent Articles

Back to top button