News

நாட்டில் தேவையானளவு நாட்டரிசி கையிருப்பில் இருப்பதாகவும், கிலோ 220 ரூபாவுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது

நாட்டில் தேவையானளவு நாட்டரிசி இருப்பில் இருப்பதாகவும் ஒரு கிலோ அரிசியை 220 ரூபா என்ற நிர்ணய விலையில் பெற்றுக்கொடுக்க நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் விவசாய, கால்நடை வளம், உட்கட்டமைப்பு, மீன்பிடி, நீரியல்வள அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார்.



அரசின் நிர்ணய விலையின் அடிப்படையில் அரிசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பாரிய நெல், அரிசி ஆலை தொழிற்சாலை உரிமையாளர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தாலும் இதுவரையில் விலை கட்டுப்பாட்டுக்கு வரவில்லை என்று அறிவிக்கப்படுகிறது . இந்நிலையில், நாட்டரிசி உள்ளிட்ட ஒருசில அரிசி வகைகளுக்கும் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்பில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.



இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,



அரிசிக்கான நிர்ணய விலை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பின்னர் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி எங்களுக்கு ஆலோசனை வழங்குவார். எவ்வாறானாலும், 220 ரூபா என்ற நிர்ணய விலையில் அரிசியைப் பெற்றுக்கொடுக்க நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம். மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் .



தரவு அறிக்கைகளின் அடிப்படையில் தேவையானளவு நாட்டரிசி நாட்டில் இருப்பில் இருக்கிறது. அரசாங்கம் என்ற அடிப்படையில் நெல் கொள்வனவு சபையை பலப்படுத்துவதற்காக களஞ்சியங்களை அமைக்குமாறு ஜனாதிபதி மேலும் ஆலோசனை வழங்கியிருக்கிறார். அதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.



34 இலட்சம் மெற்றிக் தொன் நெற் தொகையை அரசாங்கம் கொள்வனவு செய்கிறது. எனவே, அரிசிக்கான சந்தை விலையை நாலைந்துபேர் இணைந்து தீர்மானிப்பதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். நீதியான விலை நிர்ணயத்தின் கீழ் மக்கள் உண்வு உண்பதற்கான நிலைமையை நாங்கள் ஏற்படுத்துவோம்’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.



நா.தினுஷா

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button