காலஞ்சென்ற தன் பெற்றோரின் நினைவாக வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஒரு மில்லியன் ரூபா செலவில் திறந்த வெளியரங்கு அமைத்துக் கொடுத்த தொழிலதிபர் அல்ஹாஜ் J.M. ரம்சீன்

வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான தொழிலதிபர் அல்ஹாஜ் J.M. ரம்சீன் அவர்களால் சுமார் ஒரு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட திறந்தவெளியரங்கு இன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்காட்டுவதற்கு பொருத்தமான மேடை வசதிகள் இல்லாமை இது வரை காலமும் ஒரு பாரிய குறையாகக் காணப்பட்டது.
இதற்குத் தீர்வாக
*அல்ஹாஜ் ஜே.எம்.ரம்சீன் அவர்கள் தனது காலஞ்சென்ற பெற்றோர்களான மர்ஹூம் ஜெய்னுல் ஆப்தீன், மர்ஹூமா அமீரும்மா ஆகியோரின் நினைவாக இந்த திறந்தவெளி மேடையை அமைத்துக் கொடுத்தார்*
இந்த மண்டபம் அல்ஹாஜ் ரம்சீன் அவர்களால் இன்றைய தினம் வைபவ ரிதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பாவணைக்கு விடப்பட்டது.
மாணவர் நலன் கருதி இந்த உதவியை வழங்கியமைக்காக அதிபர் S.M. பைரூஸ் அவர்களால் பொண்ணாடை போர்த்தி கொளரவிக்கப்பட்டார்.
மேலும் கடந்த சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த 57 மாணவர்களும் பாடசாலையின் ஆசிரியர்களும் இந்த நிகழ்வின் போது நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின்பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர். ராபி – வெலம்பொடை




