News

கோழி கூண்டிற்கு அருகில் 200 கோடி ரூபாய் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவத்தின் விபரங்கள் வெளியானது

செவனகல பகுதியிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று (1) கண்டுபிடிக்கப்பட்ட 54 கிலோ ஹெரோயின் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த போதைப்பொருள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆர்மி சூட்டிக்கு சொந்தமானது என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தம்மிக்க சமன் குமார என்ற நபர் கடந்த 30ஆம் திகதி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டபோதும், 7 கிலோ ஹெரோயின் மற்றும் 1 கிலோ ஐஸ் போதைப்பொருளை பொலிசார் கைப்பற்றினர்.

குறித்த போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 20 கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, செவனகல பிரதேசத்தில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

200 கோடி ரூபா பெறுமதியான 54 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் தொகை, செவனகல, கிரிவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் உள்ள கோழிக்கூடு ஒன்றிற்கு அருகில் மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் புதைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அந்த வீட்டில் வசிக்கும் கணவன், மனைவி இருவரையும் பொலிசார் கைது செய்த நிலையில், குறித்த போதைப்பொருளை பொரலஸ்கமுவில் கைதான நபர் புதைத்து வைத்தது அவர்களின் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டில் உள்ள பெண் அந்த நபரின் சகோதரி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button