News
நாட்டில் தற்போது நிலவும் அரிசி பிரச்சினைக்கு ஜனாதிபதியோ அரசாங்கமோ பொறுப்பல்ல ; அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன

நாட்டில் தற்போது நிலவும் அரிசி பிரச்சினைக்கு ஜனாதிபதியோ அரசாங்கமோ பொறுப்பல்ல என வர்த்தகர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சில நாட்களாக சந்தையில் நாட்டு அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த டட்லி சிறிசேன, தனது அரிசி ஆலையினூடாக கீரி சம்பா அரிசி மாத்திரமே நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுவதாகக் குறிப்பிடுகின்றார்

