News

பெற்றோல் லீட்டருக்கு 120 வரி அறவிடப்படுகிறது ; பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர்

இம்முறையும் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருளின் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா கூறுகிறார்.

செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த அவர், எரிபொருள் வரி குறைப்புக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றார்.

ஒக்டோபர் 31ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விலை சூத்திரத்தின்படி 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் தலா 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் இன்று (04) செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தது.

துறைமுகத்திற்கு வந்து இறங்கும் போது பெற்றோல் ஒரு லீட்டர் 159 ரூபாய் எனவும் அதற்கு 120 ரூபா வரி அறவிடப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் , வரியை குறைப்பது தொடர்பில் நிதி அமைச்சு தீர்மானிக்க வேண்டும் என கூறினார்.

Recent Articles

Back to top button