News

உயிர்த்த ஞாயிறு மர்மம்… புற்றிலிருந்து பாம்புகள் மீண்டும்
வெளியில் வருகின்றன…
ஜனாதிபதிக்கு ஒரு நாளும் இந்த இரும்புத்திரையைக் கிழிக்க இயலாது என்பதை நான் பொறுப்புடன் தெரிவிக்கிறேன் ; ரவூப் ஹக்கீம்

உயிர்த்த ஞாயிறு மர்மம்;

ஜனாதிபதிக்கு ஒருபோதும்   இரும்புத்திரையைக் கிழிக்க இயலாது

புற்றிலிருந்து பாம்புகள் மீண்டும்
வெளியில் வருகின்றன.

உடுநுவர ,வட்டதெனியவில் ரவூப் ஹக்கீம் பரபரப்பு தகவல்

நியாயமான,நேர்மையான அதிகாரிகளை கைது செய்யுங்கள்  என்று நாமல் குமார கத்துவதற்குப் பின்னால் மிகப் பெரிய ஒரு சூழ்ச்சி இருப்பதாகவும், அதனை வெளிக் கொணர இதற்கு முந்திய ஜனாதிபதிகளுக்கும் அரசாங்கங்களுக்கும் கூட முதுகெலும்பு இருக்கவில்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், உடுநுவர, வட்டதெனியவில் செவ்வாய்க் கிழமை(3) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர்  அங்கு மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவையும், பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலை செய்வதற்கு சதி ஒன்று நடக்கிறது என்று சொல்ல வந்தவர்தான் இந்த நாமல் குமார.

தற்போது மீண்டும் வந்து ரவி செனவிரத்தினவையும், ஷானி அபயசேகரவையும் கைது செய்யுங்கள் என்று கூச்சல் போடுகிறார்.

இந்த வட்டதெனிய,தஸ்கர, போன்ற பல இடங்களில் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டது நினைவிருக்கும். சில இளைஞர்களின் வீடுகளில் குண்டை வைத்து அவர்களை பிடித்துக் கொண்டு சென்றார்கள்.

அந்த கட்டத்தில் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக,  தாக்குதலின் பிறகு இளைஞர்கள் மாறி,மாறி கைது செய்யப்பட்டார்கள்.வகுப்புகளுக்குச் சென்ற அப்பாவி இளைஞர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

மாவனல்லையில் புத்தர் சிலை உடைக்கப்பட்டது கைது செய்யப்பட்ட. அந்த இளம் வயதினருக்கு தெரியுமா? அவ்வாறு தெரியாமல் சென்று,  இவர்களை பிடிப்பதற்கு ஆதாரமில்லை,.இவர்கள் பயிற்சி வகுப்புக்கு சென்றவர்கள் என்ற சந்தேகத்தில், ஒரு கைக்குண்டை வைத்து பிடித்துக் கொண்டுபோய் அடைத்தார்கள்.

மாதக் கணக்கில் இன்னும் வழக்குப் பேசுகிறார்கள்.  அடிக்கடி அந்த குடும்பத்தவர்கள் என்னோடு பேசுவார்கள்,  அவர்களுக்கு நான் என்னாலான சட்ட உதவிகளை இயன்ற அளவுக்குச் செய்திருக்கிறேன்.

ஆனால் ,இவை எல்லாவற்றிற்கும் பின்னால்  பெரிய சதி ஒன்று இருக்கிறது. இந்த சதி அம்பலத்திற்கு வரவேண்டும் என்றுதான் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்தின் தலைவர் கர்தினாலும்  அடிக்கடி பேசுகிறார்.

புதிதாக இந்த நாமல் குமார ஏன் திரும்ப வெளியில் வரவேண்டும் ? இவருக்கு பின்னால் இந்த நாட்டில் ஒரு இரகசிய குழு இயங்குகிறது, இவருக்கு மேலால் இருக்கின்ற மிக மோசமான கும்பல் ஒன்று  இவர்களை வழிநடாத்துகிறது என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால், இந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும்,நானும் இது பற்றி பாராளுமன்றத்தில் நிறைய  விடயங்களைப்  பேசியிருக்கிறோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக பக்கம் பக்கமாக இது சம்பந்தமான பல விடயங்களை ஆராய்ந்து பார்த்து,  எங்கெல்லாம் இடைவெளி இருக்கிறது? எங்கெல்லாம் சந்தேகம் இருக்கிறது?இவற்றிற்கு பின்னால் என்ன நடந்தது ? இந்த முஸ்லிம் சமூகத்திற்கு மேல் இப்படியொரு பெரிய பழியைப் போடுவதற்கு ஒரு திட்டம் இருந்தது, அதன் மூலம் ஆட்சியை கைப்பற்றுவதற்கு கடந்த ஆட்சியாளர்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது என்பவையெல்லாம் நிரூபணமான விடயங்கள். இன்னும் இவற்றை பேசவேண்டிய அவசியமில்லை. ஆனால் ஜனாதிபதி இன்னும் கொஞ்சம் விசாரிக்கவேண்டும் என்று சொல்கிறார்.

அவருக்கு விசாரிப்பதைவிட வழக்கும் போட இயலாதும் போகும். பின்னால் இருப்பது இந்த நாட்டில் இருக்கின்ற மிக பிரதானமான இரகசிய அமைப்புக்கள். அந்த அமைப்புக்களில் கைவைக்க இயலாது  இதுதான் உண்மை,  நான் இன்று பொறுப்போடு இந்த விடயத்தை சொல்கின்றேன்.
ஒரு நாளும் இந்த இரும்புத்திரையைக் கிழிக்க இயலாது.

இவ்வளவு தைரியமாக நாமல் குமார வெளியில் வருகிறார் என்றால்,  இப்படி தைரியமாக செய்தியாளர் மாநாடு நடத்துகிறார் என்றால், இவ்வளவு காலமும் ஆளையே காணவில்லை, அமைதியாக இருந்துவிட்டு, அவர் வந்து சொன்னதன் பிறகுதான்  இந்த நாட்டினுடைய பயங்கரவாத தடுப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டு சிறிது காலம் சிறையில் இருந்தார். இந்த ரவி செனவிரத்தினவையையும் கைது செய்யவேண்டும் என்பதுதான் இப்போது அவர்களின் கோரிக்கை. ஏனென்றால் அவர்களிடம் பல விடயங்கள்  இருக்கின்றன.ரவி செனவிரத்தின தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக

நான் அவர் சார்பாக பேசியவன் என்ற அடிப்படையில்,   இந்த அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்க வரவில்லை,  ஜனாதிபதி தரப்பில் இவரை பாதுகாத்துப் பேசுகிறார்கள். அமைச்சர் விஜித ஹேரத் பேசியதை நான் பார்த்தேன். அமைச்சர் விஜித ஹேரத் ரவி செனவிரட்டவுக்கு சார்பாக பேசினார்,ஷானிக்கு சார்பாக பேசுகிறார் . ஆனால் இவர்களையெல்லாம் விட நாங்கள் கூடுதலாக பேசியிருக்கிறோம்.

அந்த இரண்டு பேரும் நேர்மையான அதிகாரிகள் இதை நான் மிகத் தெளிவாக சொல்லவேண்டும். ஆனால் அரசாங்கம் உண்மையை கண்டறிவதற்கு என்ன செய்கிறது என்பதைத்தான் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த உண்மை வெளியில்வரவேண்டும் ஏனென்றால் வட்டதெனியவும் பாதிக்கப்பட்டிருக்கிறது .அவ்வாறே வெலம்பட மற்றும் தஸ்கரையிலும் ,கல்கமுவயிலும் இளைஞர்கள் சிலர் பாதிக்கப்பட்டார்கள்.
ஏனென்றால், இந்த அப்பாவி இளைஞர்களையெல்லாம் இப்படியான ஒரு பெரிய குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்படுத்தி ,புத்தர் சிலை உடைப்பிலும் அவர்களுக்கு ஏதோ தொடர்பிருப்பதான தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டது. ஏனென்றால், எந்தக் காலத்திலும் எங்களுடைய சமூகத்தினர் இப்படியான ஒர் அநியாயத்தை ஒருபோதும் செய்யமாட்டோம்.
அவற்றை செய்யத் தூண்டினது யார் ,எந்த சக்தி என்பது மிகத் துலாம்பரமாக தெரிகிறது. ஏனென்றால்  முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கு இடையில் மோதலை  ஏற்படுத்தவேண்டும் என்பது அவர்களின் நோக்கம்.  அரசாங்கத்திலிருந்த நேரம் இந்த பிரதேசத்திலும் ஒரு பெரிய ஆபத்து நேரவிருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. பெரிய ஒரு கலவரம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டது ,அப்போது நான் சீனாவுக்கு போகவிருந்த நிலையில், அப்போதையபிரதி பொலிஸ் மா அதிபரை அழைத்து    நீங்கள் இந்த பிரச்சினையை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறீர்களா எனக் கேட்டேன். அந்த நாட்களில் பள்ளிவாசல் தலைவராகவிருந்தவருக்கும் இது தெரியும், நான்    பிரதி பொலிஸ் மா அதிபரிடம் என்னுடைய சீனப் பயணத்தை இரத்து செய்யட்டுமா என்றேன். ஏனென்றால் பிரச்சினை ஏற்படாது என்ற வாக்குறுதியை அந்த நேரம் பள்ளிவாசல் தலைவராகவிருந்தவருக்கும் தெரியும், நான்    பிரதி பொலிஸ் தரவேண்டும் அவர் சொன்னார் இல்ல,இல்ல சேர் நான் உடனடியாக சம்பந்தப்பட்ட பௌத்த விகாரைக்கு பேசி,அந்த விகாராதிபதியின் தலைமையிலதான் சில விடயங்கள் நடக்கப் போறதாக பேசப்படுகிறது,  நான் அவரை எச்சரித்திருக்கின்றேன்    செய்யக்கூடாது என்று, எதுவும் நடக்கக்கூடாது,அசம்பாவிதம் நடந்தால் எல்லோரையும் நான் கைதுசெய்வேன் என்று உறுதியாக சொல்லியிருக்கிறேன் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் நீங்கள் வெளிநாடு போய் வரலாம் என்று சொன்னார், அதற்கு பிறகுதான் நான் சென்றேன்.

ஆனால் இதேமாதிரியான பதற்றத்தை மீண்டும் உருவாக்குவதற்கு சில பொந்துகளிலிருந்து பாம்புகள் வெளிப்பபடுகின்ற மாதிரி விளங்குகிறது.ஆனால் இந்த அரசாங்கத்தில் அப்படி நடக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.

,ஆனால் அந்த தீயசக்திகள் திரும்ப வெளியில் வருகின்றன. நியாயமான,நேர்மையான அதிகாரிகளை கைது செய்யுங்கள் என்று கத்துவதற்குப் பின்னால் மிகப் பெரிய ஒரு சூழ்ச்சியை வெளியில் கொண்டுவந்து விடாம ல் தடுப்பார்கள் என்ற அச்சம் நிலவுகின்றது..  ஆனால் ,இந்த சூழ்ச்சியை  கண்டுபிடிப்பதற்கு இந்த .அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்கிறதா என்பதைத்தான் நாங்கள் முதலில் பார்க்கவேண்டும்.

இதற்கு முந்திய ஜனாதிபதிகளுக்கு அந்த முதுகெலும்பு இருக்கவில்லை, ரணில் விக்கிரமசிங்கவும் எவ்வளவோ சொன்னார், அவர் காலத்தில் இது நடக்கும்,அது நடக்கும் என்று உறுதி மொழி சொன்னார்.
இந்த கர்தினலும்  இந்த அரசாங்கத்தை நம்புவதாக சொல்கிறார். ஆனால் எந்த ஜனாதிபதிக்கும் இந்த இரும்புத் திரைக்கு அப்பால்போக இயலாது  என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், உண்மை வெளிக்கொணரப்படவேண்டும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் பற்றி , உண்மையான பல விடயங்களை பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறேன்.எனவே, இது வெளிவந்தாகவேண்டும் என்ற விவகாரத்தில் நாங்களும் அவதானமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இதே ஜனாதிபதி பல தடவைகள் பாராளுமன்றத்தில் நான் பேசிய விடயங்களை அவரும் பேசியிருக்கிறார். மாறி,மாறி நாங்கள் பல ஆதாரங்களை காட்டியிருக்கிறோம். எனவே, இந்த ஜனாதிபதிக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது நடந்த சம்பவங்களின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்பது மிகப் பிரதானமான விடயமாகும்.

நாங்கள்  நிறைய அபிவிருத்திகளை செய்திருக்கிறோம் அதை இங்கு பேச  வரவில்லை ,ஏனென்றால் அமைச்சராக இருக்கிற நேரம் அபிவிருத்தி செய்யத்தான் வேண்டும் அது எங்களுடைய கடமை, அதைப் பறை சாற்றுவது எனது பழக்கமுமல்ல, இருந்தாலும் மக்களுடைய பாதுகாப்பு,மக்களுடைய குரலாக இருக்கும் என்னுடைய பிரதானமான கடமையென்று நான் எண்ணுகின்றேன். அதற்காக அபிவிருத்தி செய்வதில்லை என்பதல்ல.  எனவே எப்போதெல்லாம் பிரச்சினைகள் உருவெடுக்கிறதோ ,அந்த பிரச்சினைகளின் போது பிரதான தலையீடுகளை நாங்கள் செய்திருக்கிறோம்,உங்களுடைய சார்பில் பேசியிருக்கிறோம், உங்களுக்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுமிருக்கிறோம் என்றார்.

தொகுப்பு: எம்.என்.எம்.யாஸிர் அறபாத் (பீ.ஏ)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button