“நூற்றாண்டு விழா காணும் மொனராகலை – பகினிகஹவெல முஸ்லீம் மத்திய கல்லூரி”
ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் கல்வியின் விருட்சமாய் கலங்கரை விளக்காய்த் திகளும் மொனராகலை பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரியின் மாபெரும் நூற்றாண்டு விழா.
2024 ல் அகவை நூறை அடைந்திருக்கும் பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் ஆசிரியர் குலாம் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் கோலாகல திருவிழா இம்மாதம் 23 நம் திகதி காலை 8 மணிக்கு பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரியில் ஊவா மாகாணத்தின் ஆளுநர் சட்டத்தரணி திரு கபில ஜயசேகர அவர்களின் தலைமையில் வெகு விமரிசையாக இடம் பெறவுள்ளது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடாதிபதி கலாநிதி பேராசிரியர் பாசில் அவர்களும், கௌரவ அதிதியாக ஊவா மாகாணத்தின் கல்வி அமைச்சின் செயலாளர் திரு காமினி மஹிந்தபால அவர்கள், ஊவா மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர் திரு ரோகித அமிரதாச அவர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு பிரசாத் குமார அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர். மேலும் விசேட அதிதியாக அல்ஹிமா பவுண்டேஷனின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நூருல்லா நளீமி அவர்களும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.