ஜனாதிபதித் தேர்தலில் பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை தாண்டியும் அனுரகுமார ஜனாதிபதியானது போல், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி கண்டி மாவட்டத்தில் பெருவாரியாக வெற்றிபெறும் ; ரியாஸ் பாரூக்
வெற்றிகரமான பங்கொள்ளாமடை மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட
கண்டி மாவட்டத்தில் திசைகாட்டி சின்னம் 11ம் இலக்கத்தில் போட்டியிடும் ரியாஸ் பாரூக் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதிலும்
சகோதரர் அனுரகுமார ஜனாதிபதியானார்.
தற்போது பாராளமண்றத் தேர்தலிலும் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவில்த்து விட்டிருக்கிறார்கள் நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி கண்டி மாவட்டத்தில்10 ஆசணங்கள் வரை வெள்ள அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்
கட்சிக்கு கட்சி தாவி மக்களின் வாக்குகளோடு விளையாடும் வேட்பாளர்களை தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் உள்வாங்காது என தெரிவித்த அவர்
அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கியதான நல்லாட்சியை ஏட்படுத்தக்கூடிய பாரளமண்றத்தை அமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் ஒரே நோக்கமாகும் எனவும்
அரம்ப காலம் தொட்டே jvp தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான அனுர குமார திசானாயக அவர்கள் அகுறனைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிரார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமென தனதுரையில் தெரிவித்தார்.
பெருமளவிலான பங்கொள்ளாமடை இளைஞர்கள் கலந்து கொண்டதுவும் குறிப்பிடத்தக்கது.