News
பிரமிட் பிஸ்னஸ் மூலம் பல நபர்களிடமிருந்து 1,800 மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் சிக்கினார்
நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த இலங்கையர் ஒருவர் மலேசியாவில் இருந்து வருகை தந்தபோது சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டார்.
பிரமிட் மோசடி மூலம் பல நபர்களிடமிருந்து 1,800 மில்லியன் ரூபாய் இந்த நபர் மோசடி செய்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு நாட்டை விட்டு தப்பிச் சென்ற இவரை வரவேற்க வந்த அவரது மனைவியும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜே.டி.சி.எஸ். பிசினஸ் ஸ்கூல் என்ற நிறுவனத்தை குருநாகலில் நடத்தி 2500 பேருக்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்த இந்த நபர் 11 வங்கிக்கணக்குகளையும் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.