மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் இன் 30 வருட பாராளுமன்ற உரைகளின் தொகுப்பு நூல் இலங்கையின் ஒரு வரலாற்று ஆவணமாக அமையும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த மூன்று தசாப்த காலமாக 1994 முதல் 2024 வரை இலங்கை பாராளுமன்றத்தில் சிங்களத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூலான நியாயத்தின் குரல்கள் என்ற பெயரில் முனைவர் பி. ஏ. ஹஸைன்; மியா, ஆசிப் ஹஸைன், டொக்டர் ஏ. ஆர். ஏ. ஹபீஸ் ஆகியோர்களினால் தொகுக்கப்பட்ட நூல் வெளியீட்டு விழா கண்டி, “கரலிய” டி. எஸ். சேனாநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புச் பேச்சாளராகக கலந்து கொண்ட பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் உபுல் பண்டார திசாநாயக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, பேராசிரியர் ஹஸைனியா, ரவுப் ஹக்கீம் அவர்களுடைய குடும்பத்தினர் என பெரு எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் கலாநிதி ஹஸைனமியா ; உரையாற்றும் போது
ஒரு பல்கலைக்கழக ஆசிரியன் என்ற வகையில் நான் ஆராய்சிக்கும் புத்தக வெளியீடுகளுகும் முக்கியத்துவம் கொடுப்பவன். ஏதிர் காலத்தில் இங்கு குறிப்பிடப்படும் விடயங்கள் ஒரு வரலாற்று ஆவணமாக அமையும் என்பது நம்பிக்கையாகும். இந்த நூலை ஒரு நாவல் போன்று வாசிக்க முடியாது.
இதனை ஒரு மூலாதார நூலாகவே உசார்த்துணை நூலாக கருத வேண்டும். ஆய்வாளர்களுக்கும் தமது ஆராய்ச்சியாளர்களுக்கும் தேவையான விடயங்களைக் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இந்நூலில் விடயங்கள் உள்ளன.
ஒரு மாத காலத்திற்குள் இவ்வளவு பெரிய தொகுப்பை மூன்று மொழிகளிலும் இந்நூலை வெளிக்கொணர்வதற்குப் பணிக்கப்பட்டிருந்தேன்.
உண்மையிலே அது மிகச் சிரமமான பணியாகவே அது இருந்தது. இருப்பினும் அச்சுவாலை எதிர் கொண்டு சிங்களம் ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் இந்நூல்களை உருவாக்கி இன்று அவை உங்களின் கைகளில் ரவுப் ஹக்கீம் என்ற ஒரு அரசியல் ஆளுமையின் பாராளுமன்ற உரைகளின் தொகுப்பாக வெளியிடுவதை யிட்டு இந்நூல்களின் பதிப்பாசிரியர் என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
இலங்கை பாராளுமன்றத்தில் ஹக்கீமின் உரை பலராவும் கூர்ந்து கவனிக்கின்ற ஓர் உரையாகவே இருந்து வருகின்றது.
இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அவரது பாராளுமன்ற உரைகளும் மிகவும் காத்திரமானவையாகும். கடந்த முப்பது ஆண்டுகளில் இலங்கையின் அரசியல் போக்குகள் குறித்து ஆராய விரும்பும் ஒருவருக்கு அவரது உரைகளிலிருந்து நல்ல தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். அவரது பாராளுமன்ற உரையானது கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், நீர்ப்பாசனம், இலங்கையின் இனப்பிரச்சினை, சட்ட அபிவிருத்தி, சர்வதேச விவகாரங்கள், வெளிநாட்டு உறவுகள், சிறுபான்மை விரகாரங்கள், சிறுபான்மை உhமைகள், காழி நீதிமன்றங்கள் என பல விடயங்களை உள்ளிடக்கியதாகும். அவரது ஒவ்வொரு உரையினையும் அவதானித்து பொருத்தமான தலைப்பின் கீழ் அவரது உரைகள் இநூலில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹக்கீம் ஒரு பன்மைத்துவ ஆளுமை கொண்டவர் என்பதை பறைசாட்டுவதாக ய் அவரது பாராளுமன்ற உரைகள் அடங்கிய இத்தொகுப்பு அமையுமென நான் கருதுகின்றேன்.
ஏனெனில் இப்பதிப்பின் மூலம் அவரது பேச்சி திறன் மட்டுமல்ல விடயங்களைக் கையாளும் அவரது அறிவுத் திறனும் நன்கு புலப்படுகின்றது. ஒவ்வொரு விடயங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து அப்பிரச்சினைகளின் ஆழத்தைப் புரிந்து அதற்கேற்ற சொல் நயத்துடன் மும்மொழிகளிலும் பிரச்சினைகளை முன் வைக்கும் திறன் அவருக்கே உரியதாகும் இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுத் திறனுக்கும் ஆற்றலுக்கும் அறிவுக்கும் இலக்கணம் வகுத்தவர் என்று பட்டியலிடும் போது நிச்சயம் ஹக்கீமின் பெயரும் இடம்பிடிக்கும் என நம்புகின்றேன்.
அவரை உரைகள் சிறுபான்மை சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு ஓர் அரணாகவே இருந்து வருகிறது.
இக்கட்டடித்தில் ஒரு சிறு நிகழ்ச்சியை நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். சென்னையில் மறைந்த தலைவர் மு, கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் சிறப்புச் பேச்சாராளக கலந்து கொண்டு கவிப்பேரரசு வைரமுத்துவே இவரின் தமிழ் புலமையை வியந்து பாராட்டிப் பேசியதை நாம் அறிவோம்.
உண்மையில் ஹக்கின் மொழிப் புலமை வியற்புமிக்கவை. சில சந்தர்ப்பங்களில் வட்டார மொழிகளிலும் உரையாற்றும் திறன் மிக்கவர் வனப்புமிக்க கிழக்கின் நையாண்டிச் சொல்லாடல்களையும் தனது உரையில் பயன்படுத்தி நம்மை வியப்பூட்டச் செய்வார்.
இதேபோல சிங்கள மொழியிலும் மிகச் சரளமாக அவரது உரைகள் அமைந்துள்ளன. ஆங்கிலத்தைப் பற்றி கேட்க வேண்டியதில்லை. ஆற்றொழுக்காக ஆணித்தரமாக ஆங்கிலத்திலேயே அவருடைய கருத்துக்களே பாராளுமன்றத்தில் வெளிக் கொண்டு வந்துள்ளார்.
ஏனைய பாராளுமன்ற அங்கத்தவர்களின் மத்தியிலேயே அவருக்கு நல்ல பேச்சாளர் அறிவார்ந்த மனிதர் என்ற ரீதியிலும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரின் பேச்சுக்களின் தாற்பரியத்தை வெளிக்கொண்டு வர வெளிகொணர்வதற்காகவே நாங்கள் இந்த பாதிப்பு விடயத்தில் தன்னார்வத்தோடு ஈடுபட்டோம் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.
ரவூப் ஹக்கீம் நீண்டகாலமாக எமது தேசத்தின் அரசியல் வானில் இன, மத, எல்லைகளைக் கடந்து சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்காக குரல் கொடுப்பவராகவே நான் காணுகின்றேன்.
அவரது இப்பேச்சுத் திறன் மூலம் அவர் தொடர்ந்து விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் நின்முலை வகிக்கின்றார். பன்மைத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அதனை மேலும் நமது மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக மாற்றி விட்டார் எனலாம்.
இக்பால் அலி
10-11-2024

