News

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா?

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ)

கண்டி மாவட்டத்தில் வாழும் முஸ்லீம்கள் 1956 தொடக்கம் இன்று வரை முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தொடராக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கண்டி மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டிற்காகவும்,சமூகத்திற்காகவும், கண்டி மக்களுக்காகவும் பல்வேற்பட்ட பணிகளை இன,மத,பேதமின்றி செய்திருக்கிறார்கள். இலங்கை அரசியலிலும் தவிர்க்கமுடியாத சக்தியாகவும் மிளிர்ந்திருக்கிறார்கள்.

கண்டி முஸ்லிம்கள் விவேகமுள்ளவர்கள், அவர்களுடைய அரசியல் தலைவர்களும் விவேகமானவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள் என பலரும் போற்றும் மக்களாக முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கையில் சிறுபான்மை அரசியல் தலைவராக தற்போது தேசியத்திலும்,சர்வதேச ரீதியாகவும் அறியப்பட்ட ,30பது வருட பாராளுமன்ற அனுபவம் கொண்ட, அமைச்சராகவும் இருந்து, தனது ஆளுமைகளை வெளிப்படுத்தி பலரும் வியந்து பாராட்டும் தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டி மக்களின் பிரதிநிதியாக பல வருடங்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்கு,முஸ்லிம் சமூகத்திற்கு என நெருக்கடிகள்,பிரச்சினைகள் வந்தபோது ,அனைத்துக்கும் முகம் கொடுத்தவர் ரவூப் ஹக்கீம்.  ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற  ஆரம்பம் முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியலில் தொடங்கினாலும் முதல் முதலாக கண்டி மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். கண்டி முஸ்லிம் அரசியல் தலைவர்களுள் ஏ.சீ.எஸ் ஹமீட்க்கு பின்னர் தேசியளவிலும்,சர்வதேச இராஜதந்திர உறவுகளை பலப்படுத்திக்கொண்டவராக ரவூப் ஹக்கீம் காணப்படுகிறார்.

இவை இவ்வாறு இருக்கத்தக்கதாக, ரவூப் ஹக்கீம் தொடர்ந்து கண்டி மக்களால் தெரிவு செய்யப்படுவதால் தங்களுக்கு வாய்ப்பில்லை என கருதுபவர்களும், ரவூப் ஹக்கீம் தேசியத்தில் தவிர்க்கமுடியாத சக்தியாக இருப்பதை சகிக்கமுடியாதவர்களும், வேறு நபர்களின் அஜந்தாக்களுக்க செயற்படுபவர்களும் ரவூப் ஹக்கீமை தோற்கடிக்க அன்று முதல் இன்றுவரை முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.  மோசமான ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக ரவூப் ஹக்கீம் காணப்படுவதால் சந்திர்க்கா அம்மையார் தொடங்கி கோட்டாபய காலத்திலும் என பல சதிகள் ரவூப் ஹக்கீமை தோற்கடிக்க நடந்திருக்கிறது. கொலை செய்ய முயற்சித்த போது 12 உயிர்கள் அவரை காத்து தங்களின் உயிர்களை இழந்த வரலாறும் இவருக்கு இருக்கிறது. இப்படி எல்லா கட்டதிலும் கண்டி முஸ்லிம்களு துணை நின்றதை யாரும் மறக்கமுடியாது.

கோட்டாபய இனவாதத்தை விதைத்து 69 இலட்ச வாக்களுகளால் தெரிவு செய்யப்பட்டு பாரிய பலத்தோடு காட்சியளித்த நிலையில், அதற்கு பின் வந்த பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் தோற்கடிக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், தற்போதைய சுயற்சை குழுவில் போட்டியிடும் இஸ்திகார் இமாமுதீனும் அன்று ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவு கொடுத்து வேலை செய்தவர், ரவூப் ஹக்கீமை தோற்கடிக்கும் நோக்கில் அரசாங்கத்தின் ஆதரவோடு முஸ்லிம் வாக்குகளை உடைப்பதற்கு சுயற்சையில் போட்டியிட்டதை கண்டி முஸ்லிம்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.

அரச இயந்திரம் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக முழுமையாக செயற்பட்டநிலையில் கண்டி மக்கள், குறிப்பாக முஸ்லிம் மக்கள் அத்தனை சதிகளையும் முறியடித்து ரவூப் ஹக்கீமின் வெற்றியை முதன்மைப் படுத்தினார்கள் என்பது உண்மையாகும்.

அன்று அவர்களால் பாதுகாக்கப்பட்ட ரவூப் ஹக்கீம் என்ற முஸ்லிம் பிரதிநிதித்துவம் கோட்டாபயவின் ஆட்சியில், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதும்,நாட்டுக்கு ஏற்பட்ட மோசமான நிலைகளின் போதும் உறுதியாக நின்றவர் என்பதை விமர்சிப்பவர்கள் தெரிந்தும் தெரியாது போன்று விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் கண்டி முஸ்லிம்கள் அறியாமல் இருக்கமாட்டார்கள் என நம்புகிறோம்.

இன்றும் தேசிய மக்கள் சக்தியின் இடதுசாரி ஜனாதிபதி ஒருவர் சுமார் 43% வாக்குகளால் பெரும்பான்மை இல்லாமல் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் ,அவர்களுக்கான ஆதரவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,அதன் வெளிப்பாடாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவோம் என்ற பிரச்சாரங்களை முன்னெடுத்து இருக்கிறார்கள்.

அநுர அலையில் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு செல்லலாம் என்ற எண்ணத்தில் அனுபவம் இல்லாத,மக்கள் தொடர்பாடல் இல்லாத முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கி  முஸ்லிம் வாக்குகளை உடைத்து ,அதனூடாக தாங்கள் போட்டிருக்கும் சிங்கள வேட்பாளர்களை வெல்லவைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
பெரும்பான்மை மக்கள் அதிகமாக இருக்கும் பிரதேசங்களில் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு முஸ்லிம் பிரதிநிதிகள் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது வேட்பாளராக தேசிய மக்கள் சக்தி போட்டிருக்கும் வேட்பாளருக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு கிடைக்காது, இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை உடைப்பார்கள், இதன் காரணமாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே முதன்மையான தெரிவாக தெரிவு செய்யப்படுவார்கள் ஆனால் இவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது.

நீண்ட காலமாக பாதுகாத்துவந்த முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமலாக்கப்படும் துரதிஷ்டம் ஏற்படும். இது அபாயகரமான சூழ்நிலை என்பதை உணர்ந்து கண்டி முஸ்லிம்கள் விழித்துக்கொள்ளவேண்டும்.

முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினை என்றால் அது தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகள்தான் குரல் கொடுக்கவேண்டும், அவர்களுக்குதான் தார்மீகப் பொறுப்பு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

எனவே, கண்டி மாவட்டத்தில் மொத்த 12 ஆசனங்களில் ,அதிகமான ஆசனங்களைப் பெறும் கட்சிக்கு ஒரு போனஸ் ஆசனம் செல்லும்.  இம் முறை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கு 42,000 க்கு மேற்பட்ட வாக்குகள் தேவைப்படும்  என்ற நிலையில்,நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியில் தெரிவு செய்யப்படுபவர்களில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, அதில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் பிரதேச வாக்குகளை உடைப்பார்களே தவிற அவர்களால் வெற்றிபெற முடியாது.

இவ்வாறு பார்க்கும் போது முஸ்லிம் பிரதிநிதியை பெறவேண்டும் என்பதை விட அனுபவமிக்க,அரசியல் முதிர்ச்சி கொண்டவர்களை தெரிவு செய்நவேண்டும் என்பதில் முஸ்லிம் மக்கள் தெளிவாக இருந்துகொள்ளவேண்டும்.

அதற்கானவாய்ப்பு ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதால், வெற்றிபெற முடியாத ஏனைய கட்சிக்கும்,சுயற்சைக் குழுக்களுக்கு முஸ்லிம் மக்கள் வாக்குகளை அளித்து, இருந்து வருகின்ற முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துவிடவேண்டாம்.

எனவே, வாக்குகளை அங்கும்,இங்குமாக பிரித்து நமக்கான பிரதிநிதியை இழந்துவிடாது, நாடு இன்னும் நெருக்கடியில் இருந்து மீளாத நிலையில், தற்போது வந்திருக்கும் இடதுசாரி ஆட்சியில் என்னென்ன நடக்கவிருக்கிறது என ஊகிக்கமுடியாத சூழலில் இருப்பதை இழந்துவிட்டு தவிக்காது சிந்தித்து டெலிபோன் சின்னத்திற்கும் இலக்கம் 2 க்கும் வாக்களித்து எமது தேசத்தின் எமக்கான பிரதிநிதியாக ரவூப் ஹக்கீமை உறுதிப்படுத்துவோம்.

நமக்காக பேச ஒரு குரல் தேவை, கடந்த காலங்களில் ஆட்சியாளர்களுக்கு அடிபணியாது எமக்காக ஒலித்த உறுதியான குரலை மீண்டும் தெரிவு செய்வோம்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button