News

நாங்கள் அனைவரும் தாய்நாட்டின் நலனில் அக்கறையுள்ளவர்கள் என்ற வகையில் எந்த நேரமும் நீதிக்காக பாடுபட்ட தேசிய மக்கள் சக்திக்கு (NPP) இம்முறை கட்டாயம் எமது பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்..

அன்பான நண்பர்களே!
நல்லுள்ளம் கொண்ட உறவுகளே !

இன்னும் ஒரு சில நாட்களே தேர்தலுக்கு  எஞ்சியுள்ளது..

தேசிய மக்கள் சக்தி(NPP) நாடளாவிய ரீதியிலும் கண்டி மாவட்டத்திலும் வெற்றிபெறுவது இன்ஷா அல்லாஹ் உறுதியாகிவிட்டது…

நாங்கள் அனைவரும் தாய்நாட்டின் நலனில் அக்கறையுள்ளவர்கள் என்றவகையில் எந்த நேரமும் நீதிக்காக பாடுபட்ட இந்தக்கட்சிக்கு (NPP) இம்முறை கட்டாயம் எமது பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்..

அதே நேரம் கடந்த 25 வருடங்களாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் மனம் தளராமல் தனது கட்சியின் நல்ல முன்னெடுப்புகள் அனைத்திலும் ஆதரவளித்து நேர்மை, தன்னடக்கம், விடாமுயற்சி என பல நற்குணங்களுக்கு உதாரணமாக திகழ்ந்து கொள்கை மற்றும் விழுமியமுள்ள அரசியலை மேற்கொண்ட சகோதரர் ரியாஸ் பாரூக்(இலக்கம் 11) அவர்களுக்கு கட்டாயம் எமது விருப்பு வாக்கொன்றை வழங்குவோம்..

அதேநேரம் கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியை(NPP) பிரதிநிதித்துவப்படுத்தி லால்காந்த(இலக்கம் 2) தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களில்
பஸ்மின் ஷெரீப்(இலக்கம் 12), வைத்தியர் ஹன்சக(இலக்கம் 10), தனுர திஸ்ஸாநாயக(இலக்கம் 6), வைத்தியர் பிரசன்ன(இலக்கம் 9) என திறமையான இன்னும் பலர் போட்டியிடுகின்றனர். அந்த 14 வேட்பாளர்களிலும் எங்களுக்கு விருப்பமானவர்களுக்கு எமது மீதியான விருப்பு வாக்குகளை இடுவோம்..

தேசிய மக்கள் சக்திக்கு(NPP) வாக்களித்தல் மற்றும் ரியாஸ் பாரூக் உள்ளடங்கலாக அந்தக்கட்சியின் (NPP)பொருத்தமான வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எமது நண்பர்கள், உறவினர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் கட்டாயம் தெளிவுபடுத்துவோம்.

இயன்றவரை தெளிவுபடுத்திய பின்னரும் வேறு முடிவுகளில் யாராவது இருப்பார்களானால் அவர்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளிப்போம்..

பொருத்தமான முயற்சிகளை செய்யும் அதேநேரம் முடிவுகள் நலவாக அமைய எல்லாம் வல்லவனிடம் தினமும்  கையேந்துவோம்.

Dr. Aseedu A. Kalik, MBBS(Colombo), MD (USA)
https://owensboromedical.com/providers/aseedu-kalik/

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button