News

“டிக் டொக்” இணையத்தளம் ஊடாக ஏற்பட்ட பழக்கத்தால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி  #இலங்கையில் பதிவான சம்பவம்

“டிக் டொக்” இணையத்தளம் ஊடாக அறிந்துக்கொண்ட, அநுராதபுரம் அலையாபத்து பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய  பாடசாலை மாணவியை , இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி , பாடசாலைக்கு வராமல் இளைஞனொருவனுடன் சென்றுவிட்டு மறுநாள் பாடசாலைக்கு வந்ததாக அதிபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“டிக் டொக்” இணையத்தளம் ஊடாக அறிந்துக்கொண்ட  இளைஞனுடன்  மாணவி காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் , அவருடைய நிர்வாண புகைப்படங்களையும் இளைஞனுக்கு அனுப்பியுள்ளார். 

பின்னர் குறித்த புகைப்படங்களை முகப்புத்தகத்திற்கு வெளியிடுவதாக கூறி அச்சுறுத்திய  இளைஞன் மாணவியை,  குருநாகல் பகுதிக்கு வரவழைத்து   பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button