News
சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட லான்ட் குரூஸர் ரக சொகுசு வாகனம் தங்காலை பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டது… உரிமையாளரான வர்த்தகர் கைது.
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விதரந்தெனிய பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான லான்ட் குரூஸர் ரக சொகுசு ஜீப் வாகனம் மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (12) கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பதிவு செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஜீப் வாகனத்தின் தற்போதைய உரிமையாளரான எம்பிலிபிட்டிய பல்லேகம பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் சட்டத்தரணி ஊடாக மாத்தறை பொலிஸில் சரணடைந்துள்ளார்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த வாகனத்தை களுத்துறை பிரதேசத்தில் உள்ள அமைச்சரின் சகோதரர் ஒருவரால் குறித்த வர்த்தகருக்கு விற்பனை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.