YMMA முன்னாள் தலைவர் சஹீட் எம். ரிஸ்மியின் மிக நெருங்கிய குடும்ப உறவினர்களின் அனுசரணையில் நுகதெனிய, அல் அக்ஷா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு குடிநீர் விநியோகம்
அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தலைவர் சஹீட் எம். ரிஸ்மியின் மிக நெருங்கிய குடும்ப உறவினர்களின் அனுசரணையுடன் அகில இலங்கை வை. எம். எம். ஏ பேரவையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நுகதெனிய குன்னேபனே அல் அக்ஷா முஸ்லிம் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட சுத்தமான குடி நீர் விநியோகம் அதிபர் எம். பி. ஏ. நிஷ்ரி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தலைவர் தேசிய வளர்ச்சிக்கான அமைப்பின் தலைவருமான சஹீட் எம். ரிஸ்மி கலந்து கொண்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இதில் பாத்ததும்பர பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தார் அச்சினி திசாநாயக, கண்டி மாத்தளை மாவட்ட வை. எம். எம். ஏ இன் பணிப்பளார் இஹ்திசான் எம். ஹ{ஸைன்தீன், உதவி அதிபர். எம். ஆர். ராபி ஆகியோர் கலந்து கொண்டனதை இங்கு படங்களில் காணலாம். பானகமுவ நிருபர்
இக்பால் அலி
12-11-2024