News
வாக்குச்சாவடியில் தேர்தல் கடமையில் இருந்த 32 வயது பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு.
யாழ்.உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் கடமையில் இருந்த 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வட்டுக்கோட்டையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பு.கஜிந்தன்