உறுதியான குரலை ஊமையாக்கவோ, ஓரம் கட்டவோ விடமாட்டோம் என நெஞ்சுரத்தோடு ரவூப் ஹக்கீமை வெற்றிபெற வைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
கண்டி மக்களுக்கு மனநிறைந்த நன்றிகள்…
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ)
பல சாவால்களுக்கும்,சதிகளுக்கும் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் கௌரவ தலைவர் ரவூப் ஹக்கீமை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் முதன்மையானவராக இன,மத வேறு பாடு கடந்து தெரிவு வாக்களித்து தெரிவு செய்திருக்கிறீர்கள் என்பதையிட்டு மனநிறைவோடு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் கருதி உறுதியான குரலை மீண்டும் ஒலிக்கச் செய்வதில் பல சூழ்ச்சிகளைக் கடந்து வாக்களித்த என் மனதுக்கு நெருக்கமான கண்டி வாழ் முஸ்லிம்களுக்கு விசேடமாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ரவூப் ஹக்கீமின் உறுதியான குரலை ஊமையாக்கப் போகிறோம் என கங்கணம் கட்டிக் கொண்டு வீண் விமர்சனங்களை உலமா என்ற போர்வையில் சிலர் செய்த போதும், ரவூப் ஹக்கீமை தோற்கடிக்கனும் என்ற நோக்கோடு ஒவ்வொரு தேர்தலிலும் சுயற்சையாக வைர சின்னம்,பந்து சின்னம் என அவதாதரம் எடுத்து ஆடும் நாகங்களுக்கு தடியடி கொடுத்து, உறுதியான குரலை ஊமையாக்கவோ, ஓரம் கட்டவோ விடமாட்டோம் என நெஞ்சுரத்தோடு டெலிபோன் சின்னத்திற்கும் , 2 ஆம் இலக்கத்திற்கும் வாக்களித்து வெற்றுபெறச் செய்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
அநுர அலையில் நாடு அள்ளுண்டு போகும் போது முக்கியமான சிறுபாண்மைத் தலைவர்களும் தோற்கடிக்கப்பட்ட நிலையில், கண்டி வாழ் முஸ்லிம் சமூகம் சமயோசிதமான தீர்மானத்தை மேற்கொண்டது ,தாங்கள் விவேகமானவர்கள் என்பதை மீண்டும் தேசத்திற்கு சொல்லியிருக்கிறது.
நீண்ட கால அரசியல் அனுபவமிக்க தலைவர்களை ஒதுக்கிவிட்டு அனுபவமில்லாதவர்களைக் கொண்டு பாராளுமன்றத்தை நிரப்பும் நடவடிக்கை சிலவேளை ஆபத்துகளை நாட்டுக்கு,முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்ததன் விளைவாக 30 து வருட அரசியல் அனுபவம் கொண்ட,சர்வதேசம் வரை அறியப்பட்ட ஒரு சிறந்த ஆளுமையை கண்டி மக்கள் தெரிவு செய்து கொண்டது பாராட்டத்தக்கது.
கண்டி மக்களும்,முஸ்லிம் சமூகம் தவறானவர்களின் மோசமான விமர்சனங்களுக்குள் சிக்கி, இருப்பதை இழந்துவிடப்போகிறார்கள் என்ற ஆதங்கத்தோடு கண்டி மக்களுக்காக,முஸ்லிம் சமூகத்திற்காக என்னால் எழுதப்பட்ட விழிப்புணர்வு கட்டுரைகளை எனது தூய நோக்கம் அறிந்து கண்டி மக்களை சென்றடையச் செய்த நண்பர்கள்,கட்சி ஆதரவாளர்கள்,மனிதநேயமிக்க சகோதரர்கள் மற்றும் மடவளை செய்தி தளத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
கடந்த காலங்களில் நாட்டின் நலனிற்காக,சமூக உரிமைக்காக. ஒலித்த உறுதியான குரல் மீண்டும் பலமாக ஒலித்திடவும்,அபிவிருத்திகளை செய்திடவும், மக்களின் நம்பிக்கைக்கு உரித்தான தேசிய தலைவராக மீண்டும் மிளிரவும் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.