News
சர்வஜன பலய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அதன் தலைவர் திலித் ஜயவீர தெரிவு செய்யப்பட்டார்
கூட்டமைப்பின் தலைவரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான திலித் ஜயவீரவை கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க சர்வஜன பலய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக ‘சர்வஜன பலய’ கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை கூட்டணியின் செயற்குழு ஏகமனதாக எட்டியதாக ‘சர்வஜன பலய’ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, சர்வஜன பலய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக திலித் ஜயவீரவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அது தொடர்பான தீர்மானத்தை இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.