நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லவோ, நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கவோ நாம் விட மாட்டோம் ; எஸ்.எம். மரிக்கார்
தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்திற்கு மதிப்பளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைப் பெறுவதற்காக நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்மட்டத்திற்குக் கொண்டு வந்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த, மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதே எதிர்க்கட்சியின் முதன்மை பணியாகும்.
நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லவோ, நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கவோ, அல்லது குறுகிய அரசியல் நலன்களின் அடிப்படையில் செயல்படவோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது.
ஆனால் அரசாங்கம் தவறான பாதையில் செல்லும் போது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்