News
ரீல்ஸ் எடுக்கும் போது 300 அடி பள்ளத்தில் சறுக்கி விழுந்த இன்ஸ்டா பிரபலம் உயிரிழப்பு.
இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள கும்பே அருவி ஒரு புகழ்பெற்ற அருவியாகும்.
திரைப்படங்களில் அந்த இடம் இடம்பெறுவதால் தற்போது இந்த அருவியைக் காண்பதற்குச் சுற்றுலாப் பயணிகள் பலரும் சென்று வருகின்றனர்.
அதேபோல் கும்பே அருவிக்குச் சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலமான அன்வி காம்தர் (27) ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அன்வி காம்தரை பலத்த காயங்களுடன் மீட்டனர்.
எனினும் அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.