News
சமூக வலைகளில் தனது ஆடம்பர வாழ்க்கையை காட்டிய கிளப் வசந்த நாடு முழுதும் கடன் – பணம் இல்லாத வங்குரோத்து அடைந்த ஒருவர் என தகவல் வெளியானது.
(கயான் சூரியராச்சி)
அதுருகிரியில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்த, இறக்கும் போது நாடு முழுவதும் கடனாளியாக இருந்தவர் எனவும் பணமில்லாதவர் என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயிரிழந்த கிளப் வசந்த ஆடம்பர வாழ்க்கை நடத்தும் காணொளிகள் பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்ட போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவரது தொழில்கள் வங்குரோத்து ஆகி நாடு முழுதும் கடன்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.