மதுபானம் உற்பத்தி செய்தி விற்பனை செய்து வந்த குடும்பப் பெண் ஒருவர் மூதூர் பொலிஸாரால் கைது.
Hasfar A Haleem BSW (Hons)
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய குடும்பப் பெண் ஒருவர் நேற்று (18)மாலை கைது செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் சேனையூர் வயது (42)எனவும் வசிப்பிடத்தைக் கொண்ட பெண் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட திடீர் சுற்றிவலைப்பில் குறித்த பெண்ணிடமிருந்து விற்பனைக்க வைக்கப்பட்டிருந்த ஆறு பியர் டின்கள், 2போத்தல் 2போத்தல்கள், கசிப்பு 750 மில்லி லீற்றரும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணை சட்ட விரோத மது உற்பத்தி, அனுமதியற்ற விற்பனை போன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.