News
உலகளாவிய தகவல் தொழில்நுட்பம் செயலிழப்பு… வங்கிகள், விமான நிறுவனங்கள், உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் பாதிப்பு
உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விமான மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் முற்றாக செயலிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தின் செய்ற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் உட்பட அமெரிக்காவில் உள்ள பல விமான நிலையங்கள் தகவல் தொழில்நுட்ப செயலிழப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களும் தொழில்நுட்ப செயலிழப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.