News

இன்று  (26 நவம்பர்)  மதிய நேரம் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின் படி நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளை வரை தொடரும் என தெரிவிக்கப்படுள்ளது

27 நவம்பர் 2024க்கான வானிலை முன்னறிவிப்பு
இன்று 26 நவம்பர் 2024 அன்று மதியம் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை 2024 நவம்பர் 26 ஆம் திகதி காலை 11.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து 170 கிமீ தொலைவிலும் திருகோணமலையில் இருந்து 240 கி.மீ தொலைவிலும் தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது.

நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு மிக அருகில். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கலாம்.

இலங்கையை அண்மித்துள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நாளை அதிகாலை 04.30 மணி வரை கடும் மழை பெய்யும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் நாளை 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Source: இலங்கை வானிலை அவதான நிலையம்

via :  Ziad aia

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button