News
270,000 ரூபா பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக கோரிய பொலிஸ் OIC கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் குறித்த பொலிஸ் அதிகாரி 270,000 ரூபா பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

