News
மக்களுக்கு இடையில் முரண்பாட்டையும், இனவாதத்தை தூண்டும் வகையிலும் சமூக வலைகளில் பிரச்சாரங்களை மேற்கொண்ட 3 பேர் கைது – மேலும் சிலருக்கு பொலிஸார் வலைவீச்சு

கடந்த வருட மகாவீரர் கொண்டாட்டங்களின் காட்சிகளை, இவ்வருடம் நடைபெற்ற நிகழ்வுகளாக சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யாக பரப்புரை செய்த ஐந்து பேரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மக்களுக்கு இடையில் முரண்பாட்டையும், இனவாதத்தை தூண்டும் வகையிலும் இந்த பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், பத்தேகம மற்றும் மருதானையைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது 5 பேர் கைதாகி உள்ளனர்
சம்பவம் தொடர்பில் மேலும் சிலரை கைது செய்ய விசாரணை நடத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்

