News

வடக்கில் இடம்பெற்ற 244 மாவீரர் தின நிகழ்வுகளில் 10 இல் சில விடுதலை புலி சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வடக்கில் 244 மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று பாராளுமன்றில் அறிவித்தார்.

இந்த நிகழ்வுகளில் 10 நிகவுகளில் சில விடுதலை புலி சின்னங்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இரண்டு சம்பவங்கள் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பெதுருதொடுவ நீதிமன்றித்தில் நான்கு சம்பவங்கள் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.யாழ் நீதிமன்றத்திற்கு ஒரு சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சுன்னாகம் பகுதியில் விடுதலை புலிகள்

அமைப்பை ஊக்குவித்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று பாராளுமன்றில் அறிவித்தார்.

Recent Articles

Back to top button