News
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் யஸ்ரி அஹ்மட் (12 வயது) காலமானார்

மடவளை பஸார் கல்வீட்டு பிரதேசத்தை சேர்ந்த யஸ்ரி அஹ்மட் (12 வயது) காலமானார்.
இவர் ஜனாப் மிராக் அவர்களின் மகன் ஆவார்.
நேற்று (சனிக்கிழமை) இரவு தம் வீட்டுக்கு தந்தை மற்றும் சகோதரியுடன் கல்வீட்டு வீதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்து சுகயீனமடைந்துள்ளார் – உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது – மரணம் தொடர்பான விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை இடம்பெறும் பட்சத்தில் மரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகும் என தெரிவிக்க படுகிறது.

