News

பல பிரதேசங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறைவடைந்தது

சாதாரண தரத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 750 ரூபாவாகவும், முட்டை ஒன்றின் மொத்த விற்பனை விலை 28 மற்றும் 29 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

ஆனால் சில பிரதேசங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 900 முதல் 1100 ரூபா வரை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சில பகுதிகளில் ஒரு முட்டை 40 ரூபாய்க்கும், சிறிய முட்டை 32 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

700 முதல் 800 ரூபா வரை மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை நாளாந்தம் கோழி இறைச்சியின் தேவையின் காரணமாக சில இடங்களில் அதை விடவும்  குறைந்துள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாளாந்த முட்டை தேவையை விட அதிகளவு முட்டை கையிருப்பு கிடைப்பதால் வெள்ளை முட்டை ஒன்றின் மொத்த விலை 28 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் மொத்த விற்பனை விலை 29 ரூபாவாகவும் குறைந்துள்ளதாக, முட்டை மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button