ஏறாவூர் லிபியா கடாபி குழு விவகாரம் :ஞானசார தேரரின் பொய் பிரச்சாரங்கள் திட்டமிட்ட இனவாத முரண்பாடுகளை தூண்டும் செயலாகும்.

“நல்லாட்சி, ஒரேநாடு ஒரே சட்டத்தில் ஞனசார தேரர் அரங்கேற்றிய இனவாத கருத்துக்களை போன்றே சிஸ்டம் ஜேன்ஞ்லும் தொடருகிறார்.”
“ஞானசார தேரருக்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதைப்போன்று, சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படவும் வேண்டும்.”
“இதற்கு முன்பிருந்த அரசாங்க காலத்தில் ஞானசார தேரர் எதை செய்தாரோ அதனையே இப்போதும் செய்கிறார்.”
ஞானசார தேரரின் பொய் பிரச்சாரங்கள் திட்டமிட்ட இனவாத முரண்பாடுகளை தூண்டும் செயலாகும்.
இதேபோல ஞானசார தேரர் போன்றவர்கள் நாட்டில் இனவாதத்தை விதைத்து வருகின்ற நிலையில் அவர்களை கடந்தகால அரசாங்கங்கள் சுதந்திரமாக உலவ விட்டதன் விளைவுதான் ஞானசார தேரர் அரசாங்கத்திற்கே சவால் விடும் துணிவைக் கொடுத்திருந்தது.
இன, மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக்கூடிய செயற்பாடுகளை கடந்த அரசாங்கத்தைப்போலவே இந்த அரசாங்கமும் கண்டும் காணதது போல இருந்தால் இதன் மூலம் வருகின்ற விளைவுகள் பௌத்தத்தின் பெயரால் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய இனவாத வன்முறைகள் கடந்த காலத்தைப் போன்று நடைபெறுவதற்கு வழிவகுக்கும் என்பது இயல்பு.
“ஏறாவூரில் லிபிய கடாபி என்ற அமைப்பு இருப்பதாகவும், அவ் அமைப்பு ஞானசார தேரரரை இலக்கு வைத்துள்ளதாகவும் இதற்காகன துண்டுப் பிரசுரம் ஜூம்ஆ தினத்தில் வெளியிடப்பட்டிருந்ததாகவும் ஞானசார தேரர் ஊடகவாயிலாக கூறியிருந்தமையானது ஒரு பொய்யான தகவல் என்பது மாத்திரமல்லாது இவ்வாறான அமைப்பு, இவ்வறான தகவல்களை ஏறாவூர் பிரதேச ஊர்மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
ஏனென்றால் அவ்வாறான அமைப்பு ஒன்று இயங்குவதான எந்தவொரு ஆதரமும் சட்ட ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியற்ற முறையிலோ நிரூபிக்கப்படாத அடிப்படையற்ற ஒன்றாகும் அதேவேளை ஞானசாரர் கூறியது மிக்ப் பெரிய பொய்யாகும்.” சிலநேரங்களில் இனவாதத்தை தூண்ட நிணைப்பவர்கள் கூட ஞானசார தேரரை இவ்வாறான செயற்பாடுகளுக்கு தமக்கு சாதகமாக பயன்படுத்தவும் முயலலாம் என்ற ஐயமும் எமக்கு இருக்கிறது.”
கடந்த காலங்களில் கூட முஸ்லீம் பெண்களின் ஆடை விவகாரம், சரீஆ சட்டம்,MMDA, ஹராம் ஹலால் விடயங்கள், இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற பல விடயங்களில் ஞானசார தேரர் இனவாதத்தை தூண்டும் கருத்துக்களை தெரிவித்ததிருந்தாலும் ஒரே நாட்டவர்களாக இவ்வாறன விடயங்களில் இனமத பேதமின்ற தெளிவான புரிதல் எம்மத்தியில் இருக்கிறது.
இது மாத்திரமல்லாது இலங்கை குடிமக்களான இலங்கை முஸ்லீம்களை அரபு நாடுகளில் குடியேறவும் கூறியிருந்தார், இலங்கை சட்டத்திற்கே சவால் விடும் அளவிற்கு நீதிமன்ற தீர்ப்புக்களைக் கூட அப்போது மீறியும் அவமதித்தும் செயற்பட்டிருந்தார் என்ற அனுபவம் ஞானசாரர் விடயத்தில் எமக்கு இருக்கிறது.
எது எவ்வாறு இருந்தாலும் இலங்கை வரலாற்றில் எல்லா இனமக்களாலும் ஒரே நாட்டவர்கள் என்ற தொணியில் ஆட்சி முறை மாற்றத்திற்காக தெரிவு செய்த அரசாங்கம்தான் இந்த அரசாங்கம் இதனால் இவ்வாறான இனவாத முரண்பாட்டு தூண்டலுக்கு இவ் அரசாங்கம் இடம் கொடுக்காது என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. என்றாலும் கடந்தகால அரசாங்கத்தின் செயற்பாடுகளையே இவ் அரசாங்கமும் பல விடயங்களில் கடைப்பிடித்து வருவதை நாம் அவதானித்தாலும், ஞானசார தேரரின் இனவாதத்திற்கு வித்திடுகின்ற கருத்துக்களுக்கு இவ் அரசாங்கம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
MLM.சுஹைல்



